ஜூலை 21: 6000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.!
சாம்சங் நிறுவனம் வரும் ஜூலை 21-ம் தேதி தனது புதிய கேலக்ஸி எம்21 2021 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் வலைத்தளத்தில் வாங்க கிடைக்கும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 எடிஷன்
சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 எடிஷன் மாடல் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் பிளாக் உள்ளிட்ட இரண்டு நிறங்களில் வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புற பேனல் ஒரு கோடு மாதிரியான வடிவமைப்போடு வருகிறது, எல்லாவற்றிக்கும் மேலாக இது பிளாஸ்டிக் பாடியுடன் வரும்.

Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே
வெளிவந்த தகவலின்படி, 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்தசாம்சங் கேலக்ஸி எம் 21 2021 எடிஷன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும்.

48எம்பி பிரைமரி கேமரா
சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 எடிஷன் மாடலின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

எக்ஸிநோஸ் 9611 சிப்செட்
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் மாடலில் மிகவும் எதிர்பார்த்த எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதியசாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications