இதோ இந்த 21 ஆம் தேதி அறிமுகம்: ரூ.15,000 விலையில் 48 எம்பி கேமராவோடு வருகிறதா சாம்சங் கேலக்ஸி எம் 21 2021?

|

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு என அழைக்கப்படும் அசல் கேலக்ஸி எம் 21 புதிய பதிப்பு அறிமுகத்திற்கு தயாராக இருக்கிறது. இந்த வெளியீடு ஜூலை 21 ஆம் தேதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் சில சாம்சங் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பதிப்பு கடந்தாண்டு அறிமுகமான அசல் கேலக்ஸி எம் 21-ல் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு வெளியீட்டு தேதி, விற்பனை

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு வெளியீட்டு தேதி, விற்பனை

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு ஜூலை 21 மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போனுக்கான எந்தவொரு நிகழ்வையும் நிறுவனம் ஹோஸ்ட் செய்யாது என்பதால் இது இ-காமர்ஸ் தளத்தில் மட்டுமே பட்டியலிடப்படும். சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு விற்பனை தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 26 ஆம் தேதி அதாவது அமேசான் பிரைம் தின விற்பனையின் போது நடைபெறும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு அம்சங்கள்

கேலக்ஸி எம் 21 2021 பதிப்பிற்கான அமேசானின் பிரத்யேக மைக்ரோசைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் 21 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் பேனல் யூ வடிவ உச்சநிலையோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

பட்டியலில் ஸ்மார்ட்போனின் சிப்செட் பெயர் மற்றும் சார்ஜிங் திறன்களை குறிப்பிடவில்லை. சாம்சங் எக்ஸினோஸ் 9611 சிப்செட் மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பதிப்பு ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் வரும் என கூறப்படுகிறது. அமேசான் டீசர் படம் கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கேமரா தொகுதி அசல் கேலக்ஸி எம் 21-ல் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பதிப்பின் கேமரா தொகுதி இரண்டு பகுதிகளா பிரிக்கப்பட்டுள்ளது.

48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

ஸ்மார்ட்போன் புதிய பதிப்பில் 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைக்கப்பட்டுள்ளது என மைக்ரோசைட் தளம் உறுதிப்படுத்தியுள்ளது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. கேலக்ஸி எம் 21 2021 பதிப்பு ஆனது ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

கேலக்ஸி எம் 21 2021 பதிப்பின் விலை

கேலக்ஸி எம் 21 2021 பதிப்பின் விலை

கேலக்ஸி எம் 21 2021 பதிப்பின் விலை குறித்து எந்த விவரங்களும் இல்லை. அசல் கேலக்ஸி எம் 21 உடன் ஒப்பிடும்போது புதிய பதிப்பு இன்னும் கொஞ்சம் செலவாகும் என கூறப்படுகிறது. அசல் மாடல் விலை ரூ.13,999 எனவும் இதன் புதிய பதிப்பு சுமார் ரூ.15,000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை தகவல்கள் மட்டுமே. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி அமைப்பு

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி அமைப்பு

கேமரா அம்சங்களை தவிர ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி அமைப்பு அப்படியே இருக்கும். சிப்செட், இணைப்பு ஆதரவுகள் மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பங்கள் ஆகியவை அசல் மாடல்களுக்கு ஒத்ததாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை என்பது நிறுவனத்துக்கு குறைபாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரணம் தற்போது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி ஆதரவு இடம்பெற்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M21 2021 Edition Smartphone Launch on July 21: Expected price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X