Home
Mobile

தரமான சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனம் ஜூலை 26-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான், சாம்சங்.காம் போன்ற தளங்களில் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் விற்பனைக்கு வரும்.

கேலக்ஸி எம்21 2021 விலை

கேலக்ஸி எம்21 2021 விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே

Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட்

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் Mali-G72 MP3 GPU ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI Core சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 20எம்பி செல்பீ கேமரா

20எம்பி செல்பீ கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங், திரைப்படம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படுத்த முடியும். அதேபோல் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான
வசதிகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.

ஆர்க்டிக் ப்ளூ மற்று

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் பிளாக்
நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M51 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X