நாட்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்2.!
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எம்2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் தான் வெளவருகிறது, அந்த வகையில் முதன் முறையாக நாட்ச் டிஸ்பிளேவு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முழு வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்:
சாம்சங் கேலக்ஸி எம்2 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சிப்செட்:
கேலக்ஸி எம்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எக்ஸிநோஸ் 7885 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
மாலி-ஜி71 எம்பி2 ஜிபியு செயலி இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் அடிப்படையில் இந்த
ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு போன்ற அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
கேலக்ஸி எம்2 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பினபு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றில் உள்ளது. மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி இதில் பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 20,000 விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications