Home
Mobile

Samsung அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 6 OS அப்டேட்.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17e 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் Infinity-U எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

Samsung அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6300 6nm processor) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

Samsung அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ ஸ்மார்ட்போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. இந்த போனின் விற்பனை இன்று முதல் அமேசான் தளத்தில் துவங்குகிறது. வைப் வயலட் மற்றும் பிளிட்ஸ் ப்ளூ நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17e 5G With 6000mAh battery launched india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X