Samsung-ன் புது 5ஜி போன்.. ரூ.11999 ஆபர் விலையில் விற்பனை.. 6000mAh பேட்டரி, IP54.. நம்பி வாங்கலாமா?
சாம்சங் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எம்-சீரீஸின் கீழ், சூப்பர்-பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி (Samsung Galaxy M17e 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியது. என்ன விலை? என்னென்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? நம்பி வாங்கலாமா? வாங்க 'டக்'குனு பார்த்துடலாம்!
அசல் அறிமுக விலை: சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.13,999 என்றும், அடுத்ததாக உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.15,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லிமிடெட் டைம் ஆபர் விலை: அசல் அறிமுக விலைகள் ஒருபக்கம் இருக்க, சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது (இதை எழுதும் நேரத்தில்) ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த ஆபர் விலைகள் ரூ.2000 நேரடி தள்ளுபடியை பிரதிபலிக்கின்றன.
இந்த ஆபர் விலைகள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடித்து இருக்கும் என்று தெரியாது. ஸ்டாக் இருக்கும் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், வேகமாக செயல்படவும். சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வழியாக ப்ளிட்ஸ் ப்ளூ மற்றும் வைப் வயலெட் ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.58-இன்ச் எச்டி பிளஸ் PLS LCD திடிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை, ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கூடவே மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2டிபி வரை விரிவாக்கம் செய்வதற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்ச்சர் கொண்ட 2-மெகாபிக்சல் டெப்த் சென்சாரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்ச்சர் கொண்ட 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட் போனால் 1080p/30 fps வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.
பேட்டரியை பொறுத்தவரை, இது 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன்யுஐ 8 கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட்கள், 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் உறுதியளிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
OPINION - கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இந்தியாவில் இந்த விலைப்பிரிவின் கீழ் (ரூ.15,000 க்குள்) ஏற்கனவே ஷாவ்மீ (Xiaomi), ரியல்மி (Realme) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற பிராண்டுகளின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அந்த கூட்டத்தில் சாம்சங்கின் கேலக்ஸி எம்17இ 5ஜி மாடலும் நுழைகிறது.
இந்த போன் அதன் பெரிய பேட்டரி மற்றும் சாம்சங்கின் சாஃப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸால் சற்று தனித்து நின்றாலும், இன்னும் ஷார்ப் ஆன டிஸ்பிளே அல்லது இன்னும் திறமையான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இதன் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் என்ட்ரி லெவல் சிப்செட் - சிலருக்கு சமரசங்களாக தோன்றலாம்.
மொத்தத்தில், ஹை-எண்ட் அம்சங்களை விட, நீண்ட பேட்டரி லைஃப், சீரான அன்றாட செயல்திறன் மற்றும் சாம்சங்கின் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயனர்கள் - கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம். விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் போன்ற அம்சங்கள், அதிக அளவிலான மீடியாவை சேமித்து வைப்பவர்களுக்கும், வயர்டு ஆடியோ டிவைஸ்களை பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் - இந்த ஸ்மார்ட்போன் ஒரு தவிர்க்க முடியாத தேர்வாக இருக்கலாம்!


Click it and Unblock the Notifications








