அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2026.. 50எம்பி கேமரா.. 6 ஓஎஸ் அப்டேட்.. சாம்சங் 5ஜி போனுக்கு சூப்பர் ஆஃபர்!
அமேசான் தளத்தில் வரும் அக்டோபர் 8-ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2026 (Amazon Great Indian Festival 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.
அதாவது தற்போது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த சாம்சங் போன் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17e 5G specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6300 6nm processor) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
6.7-இன்ச் எச்டி பிளஸ் Infinity-U எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications
