Home
Mobile

Samsung போட்ட போடு.. பட்ஜெட்ல 50MP, 5MP, 2MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. IP54 ரேட்டிங். எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலான சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. இதுபோக ஓஐஎஸ் டெக்னாலஜி, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், IP54 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07), சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்துள்ளது.

Samsung போட்ட போடு.. பட்ஜெட்ல 50MP, 5MP, 2MP கேமரா..  எந்த மாடல்?

இந்த மாடல்கள் வெளியாகி ஒரு வாரம் கூட முடியவில்லை. அதற்குள் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. வருகிற அக்டோபர் 10ஆம் தேதி இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கேமரா, டியூரபிலிட்டி பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.

இந்த கேமராவில் பிளர்-ப்ரீ போட்டோஸ் (Blur-free Photos) மற்றும் ஷேக்-ப்ரீ வீடியோஸ் (Shake-free Videos) அவுட்புட் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கிடைக்கிறது. அதேபோல மொத்தமாக IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistance) கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இமேஜ் சர்ச் (Image Search), மியூசிக் சர்ச் (Music Search) மற்றும் டெக்ஸ்ட் சர்ச் (Text Search) சப்போர்ட் கொடுக்கும்படி சர்கிள் டூ சர்ச் (Circle to Search) கிடைக்கிறது. அதேபோல, ஜெமினி ஏஐ சப்போர்ட் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போனின் விலையை வைத்து இதை யூகிக்க முடிகிறது. அந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆ இருக்கிறது.

ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைத்தால், அது ரூ.12,999 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, இதுவும் பட்ஜெட் மாடலாக வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. இதில் 2 கலர்கள் வெளியாக இருக்கின்றன.

ஆகவே, மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் சப்பயர் பிளாக் (Sapphire Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கின்றன. இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். அதேபோல சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபர் 10ஆம் தேதியில் ஒட்டுமொத்த விவரங்களும் தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17 5G With 50MP Camera to Launch India on October 10 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X