Home
Mobile

தீபாவளி எதுக்கு? இப்பவே ரூ.12,499-க்கு சாம்சங்.. 5000mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அடிமட்ட பட்ஜெட்டில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. இப்போது, அமேசான் தளத்தில் கூப்பன் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஓஐஎஸ் கேமரா மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்கள் இதோ.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் இருக்கிறது. இதுபோக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.

தீபாவளி எதுக்கு? இப்பவே ரூ.12,499-க்கு சாம்சங்.. 5000mAh பேட்டரி!

ஆகவே, ரூ.12,499 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.12,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கேமரா கொடுக்கும் சாம்சங் மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் மற்றும் மாலி ஜி68 எம்2 ஜிபியு (Mali G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கொடுக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டிலும் 6 வருடங்களுக்கான ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. மேலும், ஜெமினி லைவ் (Gemini Live), சர்கிள் டூ சர்ச் (Circle to Search) போன்ற ஏஐ பீச்சர்கள் வருகிறது. அதேபோல 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1100 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட ரியர் கேமரா கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் மற்ற மாடல்களில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ், 10X டிஜிட்டல் ஜூம் மற்றும் ஃபுல்எச்டி(1920 x 1080 பிக்சல்கள்) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி மாடலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. மூன்லைட் சில்வர் (Moonlight Silver), சப்பயர் பிளாக் (Sapphire Black) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17 5G With 4GB RAM is Available for Purchase on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X