நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புத்தம் புதிய Samsung 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் நாளை (அக்டோபர் 10) இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G specifications): 6.7-இன்ச் புல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த 5என்எம் எக்ஸிநோஸ் 1330 எஸ்ஒசி (5nm Exynos 1330 SoC) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாம்சங் போனில் உள்ளன.
IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஜெமினை லைவ் Gemini Live) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு பல வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








