அதிருது இந்திய மார்க்கெட்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது Geekbench தளத்தில் SM-M176B மாடல் நம்பர் உடன்காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2340 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

எக்ஸ்நோஸ் 1330 எஸ்ஒசி (Exynos 1330 SoC) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்பகளையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன் யுஐ 7 (One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் போன் வெளிவரும். குறிப்பாக IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும்.
50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. மேலும் பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்17 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








