Samsung-ன் தீபாவளி கிஃப்ட்.. ரூ.12000 பட்ஜெட்டில் புது 5ஜி போன்.. 7.5மிமீ ஸ்லிம் டிசைனில் 5000mAh பேட்டரி!
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் அதன் முன்னோடியான கேலக்ஸி எம்16 5ஜி (Galaxy M16 5G) மாடலை விட பல அப்கிரேட்களை பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் இன்-ஹவுஸ் 5என்எம் எக்சினோஸ் சிப்செட்டில் இயங்குகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் - சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) போன்ற ஏஐ அம்சங்களும் இயல்பாகவே ஆதரிக்கிறது.

சரி வாருங்கள் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் உள்ளன? சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது எப்போது முதல், எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்? உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்:
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- FHD+ ரெசல்யூஷன் (1,080 x 2,340 பிக்சல்ஸ்) மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன்
- 5என்எம் Exynos 1330 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார்
- 5எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர்
- 2எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 13எம்பி செல்பீ கேமரா
- 25W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி (பெட்டியில் சார்ஜர் இருக்காது)
- 7.5 மிமீ ஸ்லிம் டிசைன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- Android 15 ஓஎஸ் அடிப்படையிலான One UI 7 ஓஎஸ்
- ஆறு வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அமேசான் இந்தியா வழியாக கிடைக்கும் கூப்பன் சலுகைக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் Moonlight Silver மற்றும் Sapphire Black என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அக்டோபர் 13 முதல் விற்பனைக்கு வரும்.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,499 க்கும், அதே 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஆப்ஷன்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,499 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 13எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம்
- டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட்
- சாம்சங் குவிக் ஷேர்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications