சக்கைப்போடு போட்ட Samsung.. ரூ.13,000 பட்ஜெட்ல 6 OS அப்டேட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17e 5G) ஸ்மார்ட்போனானது இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது. முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது. 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டுடன் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனானது இன்று வெளியாக உள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அதே நேரத்தில் பேங்க் தள்ளுபடி போக சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 13 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ,14,327 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.13,327 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): ஆக்டா கோர் 5என்எம் எக்ஸினோஸ் 1330 (Octa Core 5nm Exynos 1330) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஒன் யுஐ 7.0 (One UI 7.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 6 ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து உள்ளது. மேலும், 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து உள்ளது. ஜெமினி லைவ் (Gemini Live) போன்ற ஏஐ பீச்சர்களையும் கொடுத்து உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவை கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1100 நிட்ஸ் எச்பிஎம் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
IP54 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் சப்பயர் பிளாக் (Sapphire Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்17இ ஸ்மார்ட்போனை பார்க்கையில், 6.7 இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 8.2 எம்எம் தடிமன் மற்றும் ஐபி54 ரே்டிங் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 5G) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. 8 எம்பி செல்பீ உள்ளது. ஒன் யுஐ 8.0 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. இந்த மாடலுக்கும் 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் எதிர்பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி மாடலைவிட மலிவான விலைக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








