Home
Mobile

Amazon குடியரசு தின விற்பனை 2026: ரூ.12,998 பட்ஜெட்ல Samsung 5ஜி போன்.. 6 OS அப்டேட்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இப்போது அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அமேசான் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Amazon குடியரசு தின விற்பனை 2026: ரூ.12,998 பட்ஜெட்ல Samsung 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன். 1080 x 2340 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus), 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஒன் யுஐ 7.0 (One UI 7.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கான ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி போன். ஆட்டோ போகஸ், 10X டிஜிட்டல் ஜூம் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது

ஜெமினி லைவ் (Gemini Live), சர்கிள் டூ சர்ச் (Circle to Search) போன்ற ஏஐ அம்சங்கள் இந்த சாம்சங் 5ஜி போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவும் இந்த கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.

Amazon குடியரசு தின விற்பனை 2026: ரூ.12,998 பட்ஜெட்ல Samsung 5ஜி போன்!

இந்த போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ ஆதரவும் உள்ளது. மேலும் மூன்லைட் சில்வர் (Moonlight Silver), சப்பயர் பிளாக் (Sapphire Black) நிறங்களில் இந்த சாம்சங் போனை வாங்க முடியும்.

5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17 5G available at 21 percent discount in Amazon Republic Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X