Home
Mobile

லட்டு மாதிரி சாம்சங்.. வெறும் ரூ.11499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 25W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்களே நம்ப முடியாதபடி அடிமட்ட பட்ஜெட்டில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) போனின் விற்பனை இப்போது தொடங்கி இருக்கிறது. அமேசான் விற்பனையில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.11,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஒன் யுஐ 6.0 (One UI 6.0) பேஸ்டு ஆண்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity) சிப்செட் கிடைக்கிறது.

லட்டு மாதிரி சாம்சங்.. வெறும் ரூ.11499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே மாடல்!

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மூன்று வேரியண்ட்களிலும் 1.5 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த சாம்சங்கில் 6.7 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (ஆட்டோ போகஸ்) + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

மேலும், 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio)/டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் உள்ளது.

7.9 எம்எம் தடிமன் மற்றும் 192 கிராம் எடையில் காம்பாக்ட் மற்றும் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. மின்ட்-கிரீன் (Mint Green), ப்ளஷ் பிங்க் (Blush Pink) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது.

அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,299 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M16 5G With 50MP Camera Sale Under Rs 12000 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X