எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு OS அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம், டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட், சாம்சங் குவிக் ஷேர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications