Home
Mobile

மார்ச் 5 முதல் விற்பனை.. ரூ.11,499 க்கு வந்த புது Samsung 5G போன்.. 6 வருட OS, 8GB ரேம், 5000mAh பேட்டரி!

சாம்சங் (Samsung) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல; எந்தபக்கம் திரும்பினாலும், எந்த பட்ஜெட்டிற்கு சென்றாலும் அங்கே சாம்சங்கின் மாடல் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் ரூ10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கேலக்ஸி எப்06 5ஜி மாடல் மற்றும் ரூ.11,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கேலக்ஸி ஏ06 5ஜி மாடல்களை அறிமுகம் செய்தது.

இதற்கிடையில் நேற்று (பிப்.27), வருகிற மார்ச் 2 ஆம் தேதியன்று சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ சீரிஸின் கீழ் 3 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை உறுதி செய்தது. பெரும்பாலும் அவைகள் கேலக்ஸி ஏ36 (Galaxy A36), கேலக்ஸி ஏ56 (Galaxy A56) மற்றும் கேலக்ஸி ஏ26 (Galaxy A26) மாடல்களாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 5 முதல் விற்பனை.. ரூ.11,499 க்கு வந்த புது Samsung 5G போன்!

எல்லோருடைய கவனமும் மார்ச் 2 நடக்க உள்ள வெளியீட்டு நிகழ்வின் மீது இருக்கும் நேரத்தில், சாம்சங் நிறுவனம் இன்று (பிப்.28) அதன் எம் சீரிஸின் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகள் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) மாடல்கள் ஆகும்

இதில் ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனை பற்றி விரிவாக காண்போம். அதாவது இது மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்பதை பற்றி விரிவாக காண்போம்:

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி விலை, ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும். அதே 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஆப்ஷன்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்

மேற்கண்ட விலைகள் அறிமுக விலைகள் ஆகும். அதாவது ரூ.1000 வங்கி அடிப்படையிலான தள்ளுபடியை உள்ளடக்கிய விலை ஆகும். சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ளஷ் பிங்க், மிண்ட் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வருகிற மார்ச் 5 ஆம் தேதி முதல் அமேசான் வழியாக தொடங்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே

- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 13எம்பி செல்பீ கேமரா

- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம்
- டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட்
- சாம்சங் குவிக் ஷேர்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி உடன் சேர்ந்து அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பொறுத்தவரை. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கும் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கும். இது ரூ.500 வங்கி தள்ளுபடியை சேர்த்த அறிமுக விலை நிர்ணயம் ஆகும். இது பிளேஸிங் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் கலர்களில் மார்ச் 7 ஆம் தேதி முதல், அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M16 5G Launched in India Price Specifications Sale Starts From March 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X