இறங்கி அடித்த அமேசான்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் பிரைம் டே (Amazon Prime Day sale 2025) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
தற்போது நடைபெறும் அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனுக்க 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம், டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட், சாம்சங் குவிக் ஷேர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் வெளிவந்துள்ளது.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








