அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. AMOLED டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சம் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எம்16 5ஜி போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதுவும் மற்ற சாம்சங் போன்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி எம்16 5ஜி போன். பின்பு டார்க் கிரே, மிண்ட் கிரீன் (Mint Green) போன்ற நிறங்களில் இந்த போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த போனி கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே கொண்டு சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த டிஸ்பிளேவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: Android Headlines, AH


Click it and Unblock the Notifications








