சொன்னபடியே கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்த Samsung.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் 13எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 6300 (Dimensity 6300 Chipset) சிப்செட், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். தண்டர் பிளாக் (Thunder Black), ப்ளஷ் பிங்க் (Blush Pink), மின்ட் கிரீன் (Mint Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி விலை: 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனின் விலை ரூ.11,999 ஆக உள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு நாட்ச் (Infinity-U notch) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்து இதன் டிஸ்பிளே. மேலும் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. நான்கு வருடங்களுக்கு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 25W சார்ஜிங், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன். Blazing பிளாக், சேஜ் கிரீன் (Sage Green) நிறங்களில் இந்த புதிய சாம்சங் போனை வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி விலை: 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போனின் விலை ரூ.9,999 ஆக உள்ளது. வரும் மார்ச் 7-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








