மட்ட ரேட்டுக்கு வந்த SAMSUNG 5G.. ரூ.11499-க்கு AMOLED டிஸ்பிளே.. 6 OS அப்டேட்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போன் இப்போது அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களை கொடுக்கிறது. இப்போது, இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனின் புதிய விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனானது ரூ.12,499 பட்ஜெட்டில் வெளியாகியது. ரூ.1000 பேங்க் ஆஃபர் ரூ.11,499 விலைக்கு கிடைத்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் எந்த பேங்க் ஆஃபர் இல்லாமலேயே ரூ.11,499 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, குறிப்பிட்ட பேங்க் கார்டுகள் இல்லாமலேயே கம்மி பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கிறது. ஒன்யுஐ 6.0 (One UI 6.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.
6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்து இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கிறது.
13 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் கொடுக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வேரியண்ட்களில் 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. ரூ.11,499 பட்ஜெட்டில் 4ஜி ரேம் வேரியண்ட் கிடைக்கிறது.
அதேபோல 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்றபடி சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) வருகின்றன.
இருப்பினும், டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. அதேபோல கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் என்எப்சி (NFC) கொடுத்து இருக்கிறது. இப்போது கலர்களை பார்க்கலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போனில் தண்டர் பிளாக் (Thunder Black), ப்ளஷ் பிங்க் (Blush Pink) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய மூன்று கலர்களில் வாங்க கிடைக்கிறது. மேலும், அமேசான் தள்ளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல ரூ.10,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் இதில் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








