Home
Mobile

ரூ.15000க்கு Samsung-ன் சூப்பர் போன்! 6000mAh பேட்டரி, Super Fast சார்ஜிங், Super AMOLED டிஸ்பிளே! என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் 2 பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்களை (5G Smartphones) இந்தியாவில் அறிமுகம் செய்தது. அது கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G) மற்றும் கேலக்ஸி ஏ25 5ஜி (Galaxy A25 5G) மாடல்களாகும்.

இவ்விரு 5ஜி போன்களும் 2024 ஜனவரி 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன. இதற்கிடையில் சாம்சங் நிறுவனம் இன்னொரு சூப்பரான ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரூ.15000-க்கு Samsung-ன் சூப்பர் போன்! என்ன மாடல்?

அதென்ன மாடல்? அது சாம்சங் கேலக்ஸி எம்15 ஸ்மார்ட்போனாகும். இது மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ SoC) மற்றும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உடன் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ 15 5ஜி ஸ்மார்ட்போனின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது கேலக்ஸி ஏ15 5ஜி மாடலில் இருப்பதை விட பெரிய பேட்டரியுடன் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது எம்16 மாடலானது 5000mAh பேட்டரிக்கு பதிலாக 6000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இதையேத்தான் நாம் கேலக்ஸி எம்14 (Galaxy M14) மற்றும் கேலக்ஸி ஏ14 (Galaxy A14) மாடல்களிலும் பார்த்தோம்.

ரூ.15000-க்கு Samsung-ன் சூப்பர் போன்! என்ன மாடல்?

கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களையும், நான்கு வருட ஓஎஸ் அப்டேட்களையும் பெறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆக கேலக்ஸி எம்15 மாடலிலும் கூட நாம் இதையே எதிரிபார்க்கலாம். இதேபோல கேலக்ஸி எம்15 ஆனது கேலக்ஸி ஏ15-ல் இருந்து (சிப்செட் தவிர்த்து) பெரும்பாலான அம்சங்களை கடன் வாங்கிக்கொள்ளும்.

நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனில் 90ஹேர்ஸ்ட ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.5-இன்ச் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன் யுஐ 6.0 ஓஎஸ் உடன் அனுப்படுகிறது.

ரூ.15000-க்கு Samsung-ன் சூப்பர் போன்! என்ன மாடல்?

கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா (எஃப்/1.8, ஆட்டோஃபோகஸ்) + 5எம்பி அல்ட்ரா-வைட் கேமரா (எஃப்/2.2) + 2எம்பி மேக்ரோ கேமரா (எஃப்/2.2) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா (எஃ ப்/2.0) உள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனில் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Super Fast Charging Support) உடன் 5000mAh பேட்டரி உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி எம்15 மாடலில் சற்றே பெரிய 6000mAh பேட்டரி இடம்பெறும்.

என்ன விலைக்கு வரும்? பெயர் குறிப்பிடுவது போலவே கேலக்ஸி ஏ15 5ஜி ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாகும். ஆனால் கேலக்ஸி எம்15 ஒரு 4ஜி மாடலாக வெளியாகும் என்பது போல் தெரிகிறது. ஆக இதன் இல்லை நிர்ணயம் நிச்சயம் ஏ15 5ஜி மாடலை விட குறைவாகவே இருக்கும். இது ரூ.15,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடலின் விலை என்ன? 8ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,499 க்கும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.22,499 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

இதனுடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M15 with 6000mAh Battery Launch Soon Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X