Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.13,499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமான பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) போன் வெளியாகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்15 அம்சங்கள் (Samsung Galaxy M15 Specifications): இந்த சாம்சங் போன் பட்ஜெட்டில் பக்கா டிஸ்பிளே பீச்சர்களை கொண்டிருக்கிறது. 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட இன்பினிட்டி-வி சூப்பர் அமோலெட் (Infinity-V Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

செஞ்சிட்டாங்க.. ரூ.13,499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி!

800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த கேலக்ஸி எம்15 போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Syatem) வருகிறது. 50 எம்பி ரியர் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (Ultra-wide Camera) + 2 மேக்ரோ சென்சார் (Macro Sensor) கொண்டிருக்கிறது. 13 எம்பி செல்பீ வருகிறது. 4 ஜென் அப்கிரேட் உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ஒன்யுஐ 6 (OneUI 6) கொண்டிருக்கிறது. மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. அதேபோல மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த சாம்சங் மாடலில் 2 மெமரி வேரியண்ட்கள் இருக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

செஞ்சிட்டாங்க.. ரூ.13,499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி!

ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி சிஸ்டம் இருப்பதால், 217 எடை கொண்டிருக்கிறது.

அதேபோல 9.3 மிமீ தடிமன் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) பயன்படுத்தலாம். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி உள்ளது.

அதேபோல வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue), ஸ்டோன் கிரே (Stone Grey) மற்றும் ப்ளூ டாபஸ் (Bule Topaz) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகிறது.

அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளதால், அதில் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது. இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட் வட்டாரங்களில் கசிந்துவிட்டன. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M15 5G With 50MP Camera Launch on April 8 Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X