வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன் உடன் சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M15 5G specifications): 6.5-இன்ச் sAMOLED டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100+ SoC) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது. மேலும் இந்த போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Source: amazon
photo courtesy: amazon, 91mobiles


Click it and Unblock the Notifications








