Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. அடுத்த சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த இரண்டு போன்களும் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக BIS சான்றிதழ் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன் ஆனது SM-M156B என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டுள்ளது. பின்பு சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் SM-E156B என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய போன்கள் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. அடுத்த சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M15 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 1,080x2,408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவரும்.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும். பின்பு பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டே மிரள போகுது.. அடுத்த சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன்.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M15 5G spotted on BIS certification site: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X