Home
Mobile

ஃபயரு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்யும்படியான டிஸ்கவுண்ட்டில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் (Samsung Galaxy M15 5G Prime) போன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்கிறது. வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 1 டிபி மெமரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Prime Specifications): இந்த சாம்சங்கின் கேமரா பீச்சர்களே கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி இருக்கும். ஏனென்றால், டிரிபிள் ரியர் செட்டப்பை இந்த பட்ஜெட்டில் கொடுக்கிறது. 50 எம்பி ரியர் மெயின் கேமரா + 5 எம்பி செகண்டரி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

ஃபயரு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

இதுபோக மூன்றாவதாக 2 எம்பி மேக்ரோ கேமராவும் இருக்கிறது. இந்த சாம்சங் பிரைம் மாடலில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. பட்ஜெட் மாடலாக இருந்தாலும் கேமராவில் பக்காவாக இருக்க வேண்டுமானால், இது வொர்த் மாடலாகவே இருக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கும் 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.

இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் போனில் 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் (6nm Octa Core MediaTek Dimensity 6100+) சிப்செட்டும் ஜிபியு மாலி 57 (GPU மாலி ஜி57) கிராபிக்ஸ் கார்டும் கிடைக்கிறது.

ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்கம் இந்த பட்ஜெட்டில் குறை சொல்லிவிட முடியாது. 128 ஜிபி மெமரிக்கு மேலும் பேக்கப் வேண்டுமானால்,1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் இருக்கிறது. அதை பயன்படுத்தலாம், சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஒன் யுஐ 6 (One UI 6) வருகிறது.

ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ (5G SA, NSA) மற்றும் டூயல் வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802) உள்ளது. டைப்-சி போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் பிளிப்கார்ட் (Samsung Galaxy M15 5G Prime Flipkart): இந்த சாம்சங் பிரைம் எடிஷனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.13,148 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு பேங்க் கார்டுகள் தேவையில்லை.

நேரடியாக விலையில் இருந்து குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.1,851 விலை குறைப்பில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். ப்ளூ டாபஸ் (Blue Topaz), ஸ்டோன் கிரே (Stone Grey) மற்றும் செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) ஆகிய கலர்களில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M15 5G Prime With 6GB Sale Under Rs 14000 in Flipkart Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X