வெறும் ரூ.10,249 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் தரமான Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival Sale) வரும் செப்டம்பர் 27 தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பிரபலமான சாம்சங் 5ஜி போனை மலிவு விலையில் வாங்க முடியும். அதாவது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்ட உள்ளது.
தற்போது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாளை நடைபெற உள்ள சிறப்பு விற்பனையின் போது வங்கி சலுகைகள் உட்பட இந்த போனை வெறும் ரூ.10,249-க்கு வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் மாடல். மேலும் 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளன.பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது. குறிப்பாக இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் விற்பனைக்கு வருவதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications