Home
Mobile

புது மாடல் வருதுன்னு ரூ.12,000 பட்ஜெட்க்கு இறங்கியது.. 6000mAh பேட்டரி கொண்ட Samsung 5ஜி போன்!

சாம்சங் நிறுவனம் அதன் ஏ சீரீஸ் மற்றும் எப் சீரிஸின் கீழ்.. பேக் டூ பேக் இரண்டு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வேகத்தில் அதன் எம் சீரீஸின் கீழ் இன்னொரு புதிய 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போன் ஆகும்,

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியா வலைதளத்தில் "கூடிய விரைவில் அறிமுகம் ஆகும்" என்கிற பேனரின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது சற்றே பழைய சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) மாடலை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

புது மாடல் வருதுன்னு ரூ.12,000 பட்ஜெட்க்கு இறங்கிய Samsung 5ஜி போன்!

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 24% நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் எம்ஆர்பி விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,798 க்கு வாங்க கிடைக்கிறது. இது தவிர்த்து ரூ.1250 வரையிலான பேங்க் ஆபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படியாக சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.11,500 க்கு அருகில் (ரூ.11,548) கொண்டு வரலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh rate) மற்றும் 1,080 x 2,340 பிக்ஸல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை (6.5-inch Full-HD+ Super AMOLED display) கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி-ல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் 5 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. முன்பக்க கேமராவாக 13 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை, 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6,000 எம்ஏஎச் பேட்டரி (6000 mAh Battery) பேக் செய்யப்பட்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரை (Fingerprint Sensor) கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் டூயல் 5ஜி (Dual 5G), 4ஜி எல்டிஇ (4G LTE), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள்
உள்ளன.

பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது மன்த் எண்ட் மொபைல் பெஸ்டிவல் என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் ரூ.20,000 க்குள் என்கிற ஆபர் விலையில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன. அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G): ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி45 5ஜி (Moto G85 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ டி3 5ஜி (Vivo T3 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M15 5G gets Discount Ahead Samsung Galaxy M16 5G India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X