Home
Mobile

ஆளுக்கொன்னு வாங்குவீங்க.. வெறும் ரூ.11,990 பட்ஜெட்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14) மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13) ஆகிய போன்களுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்14 அம்சங்கள் (Samsung Galaxy M14 Specification): இந்த சாம்சங் போன் 6.6 இன்ச் (1080 x 2408 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் வருகிறது.

ஆளுக்கொன்னு வாங்குவீங்க.. ரூ.11,990 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி!

மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதோடு 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் பெர்ரி ப்ளூ (Berry Blue), ஸ்மோக் டீல் (Smoke Teal) மற்றும் ஐசி சில்வர் (Icy Silver) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 4 ஜிபி மாடலின் விலை ரூ.12,490ஆகவும், 6 ஜிபி மாடலின் விலை ரூ.13,490ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு ரூ.1500 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்கவுண்ட் அனைத்து வங்கி கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆகவே, இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.10,990க்கு வாங்கிக்கொள்ள முடியும். அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.11,990க்கு வாங்கிக் கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 அம்சங்கள் (Samsung Galaxy M13 Specifications): இந்த போன் 6.6 இன்ச் (2408×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 (Octa-Core Exynos 850) மற்றும் மாலி ஜி 52 ( Mali-G52) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

இந்த போனிலும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. அதோடு 1 டிபி வரையிலான எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது.

அதோடு 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 15W ஃபாஸ்ட் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 4 ஜிபி மாடலின் விலை ரூ.11,999ஆகவும், 6 ஜிபி மாடலின் விலை ரூ.13,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இப்போது, அமேசான் விற்பனையில் 4 ஜிபி மாடல் வெறும் ரூ.9,199க்கும் 6 ஜிபி மாடல் வெறும் ரூ.11,499க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு மலிவான விலையில் சாம்சங் எம் சீரிஸ் போன்கள் கிடைப்பதால், இந்தியா சாம்சங் பிரியர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஆர்டருக்கு மேல் ஆர்டர் செய்துவருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M14 M13 Gets Discount on Amazon Great Indian Festival Sale Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X