Home
Mobile

6,000mAh பேட்டரி வசதியுடன் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Samsung.!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை உக்ரைனில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ, டார்க் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6,000mAh பேட்டரி வசதியுடன் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Samsung.!

என்னென்ன அம்சங்கள்
புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் உடன் Mali G68 GPU ஆதரவு உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த கேமிங் வசதிகளுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

6,000mAh பேட்டரி வசதியுடன் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Samsung.!

புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் கேமரா வசதியும் அருமையாக உள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா
அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, புளூடூத் 5.2, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 206 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

6,000mAh பேட்டரி வசதியுடன் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Samsung.!

என்ன விலை?
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை UAH 8,299 (இந்திய மதிப்பில் ரூ.18,300)-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் விலை UAH 8,999 (இந்திய மதிப்பில் ரூ.19,900)ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M14 5G With 6000mAh battery Launched: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X