50எம்பி கேமரா, 6000mAh பேட்டரியுடன் இந்தியாவுக்கு வரும் புதிய சாம்சங் போன்.! அறிமுக தேதி இதுதான்.!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக விவோ, சியோமி நிறுவனங்களை விட குறைந்த விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது சாம்சங் நிறுவனம். இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது சாம்சங் நிறுவனம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிமைரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 206 கிராம் எடையுடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்54 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








