Home
Mobile

6000mAh பேட்டரி, 50எம்பி கேமராவுடன் புதிய சாம்சங் போன் அறிமுகம்.! விலையை கேட்டால் இப்பவே வாங்குவீங்க.!

சாம்சங் நிறுவனம் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதாவது மற்ற நிறுவனங்கள் 5ஜி போன்களை சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்கின்றன. சாம்சங் நிறுவனம் மட்டும் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் தரமான டிஸ்பிளே, அட்டகாசமான கேமரா, நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6000mAh பேட்டரி, 50எம்பி கேமராவுடன் புதிய சாம்சங் போன் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் பிஎல்எஸ் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான சாம்சங் போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிமைரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் உடன் Mali G68 GPU ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த கேலக்ஸி எம்14 5ஜி போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் சில்வர், ப்ளூ மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரி, 50எம்பி கேமராவுடன் புதிய சாம்சங் போன் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் எடை 206 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

6000mAh பேட்டரி, 50எம்பி கேமராவுடன் புதிய சாம்சங் போன் அறிமுகம்.!

அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,490-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,990-ஆக உள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த புதிய சாம்சங் போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M14 5G phone with 6000 mAh battery launched in India: Check Price, Specification : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X