குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
சாம்சங் (Samsung) நிறுவனம் இந்தியாவில் அதன் சாம்ராஜ்யத்தை இன்னும் உறுதியாக நிலைநாட்ட, ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலம் ரூ.18,000 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 5G ஸ்மார்ட்போன் (Smartphone) இப்போது வெறும் ரூ.10,000 விலைக்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுக செய்த பட்ஜெட் பிரெண்ட்லி 5ஜி (5G) ஸ்மார்ட்போன் சாதனம் தான் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சாம்சங் எம் சீரிஸ் வரிசையில் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது நிறுவனம் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி மீது நம்ப முடியாத ஒரு அபார சலுகையை அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி M14 5ஜி மீது நம்ப முடியாத சலுகை (Samsung Galaxy M14 5G):
சாம்சங் நிறுவனம் அதன் பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது சலுகையை அறிவித்துள்ளது. ஆனால், இதில் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஒரு அற்புதமான சலுகையை பெற்றுள்ளது. குறைந்த விலையில் 5ஜி சாதனம் வாங்க வேண்டும் என்ற ஐடியாவில் இருப்பவர்களுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி M14 5ஜி இப்போது பெஸ்ட் சாய்ஸ் ஆக அமைந்துள்ளது. காரணம் இப்போது இது வெறும் ரூ.10,000 விலையில் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் உண்மையில் பெஸ்ட் அம்சங்களை பட்ஜெட் விலையில் பேக்கேஜ் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.6" இன்ச் அளவு கொண்ட FHD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1080 x 2408 பிக்சல் உடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 4ஜிபி ரேம் (RAM) உடன் 128GB ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் எக்சினோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் உடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த பட்ஜெட் செக்மென்ட் சிப்செட்டாக 5ஜி இணைப்பை உறுதி செய்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவையும் வழங்குகிறது என்பதனால், ஸ்டோரேஜ் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம்.

மிரளவிடும் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி அம்சங்கள்:
இந்த சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான ஒன் UI (One UI) இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50MP + 2MP + 2MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்த மொபைல் 13MP கேமராவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 13 விதமான 5ஜி பேண்டை ஆதரிக்கிறது.
இதன் பேட்டரி அம்சம் பற்றி பேசுகையில், இந்த சாம்சங் கேலக்ஸி M14 5ஜி மொபைல் போன் 6000mAh சக்தி கொண்ட மிகப் பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இது 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது. இந்த பேட்டரி 2 நாள் வரை நீடிக்கும் தன்மை கொண்டது என்று சாம்சங் கூறுகிறது. இது 155 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.
ரூ.10,000 விலைக்குள் ஒரு பெஸ்டான 5ஜி போனை (5G Phone) வாங்க விரும்பினால், உங்கள் தேர்வு சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஆக இருந்தால், மிகவும் சிறப்பானது. இந்த சலுகை விலை இப்போது பிளிப்கார்ட் தளத்தில் லைவ் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








