50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்புசிறந்த பாதுப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு One UI 4.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்என்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 15 வாட்
பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎகஸ், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் பச்சை, நீலம்,ஆரஞ்சு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை, இருந்தபோதிலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications