அள்ளி போடுங்க.. பொசுக்குன்னு ரூ.4000 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி, 6.6-இன்ச் டிஸ்பிளேனு நம்பி வாங்கலாம்!
6ஜிபி ரேம், 6000எம்ஏஎச் பேட்டரி, 6.6-இன்ச் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது 27% நேரடி தள்ளுபடி (Flat Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது முழுதாக ரூ.4000 தள்ளுபடியை பெற்றுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:
நீங்கள் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை (Best Phone) தேடுகிறீர்கள் அதே சமயம் உங்கள் பட்ஜெட் ரூ.10,000 தான் என்றால்.. சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13) ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் இந்த சலுகை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். தற்போது இது ரூ.4000 விலைக்குறைப்பின் கீழ் அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.

இந்த போன் பட்ஜெட் வரம்பில் வரலாம், ஆனால் அம்சங்கள் மற்றும் செயல்திறன் என்று வரும்போது இது உங்களை நிச்சயம் ஏமாற்றாது. இதன் அம்சங்களை நினைவூட்டும் வண்ணம், இது 1080 x 2408 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 6.6-இன்ச் FHD+ LCD இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் ஆப்ஷன்களின் கீழ் ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் (Storage Options) கீழ் வாங்க கிடைக்கிறது: ஒன்று 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மற்றொன்று 128 ஜிபி ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நீடித்த செயல்திறனை வழங்கும் 6000mAh லித்தியம்-அயன் பேட்டரியை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி வைட் கேமரா + 2எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை இதில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் 4 (One UI Core 4) கொண்டு இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்13 பழைய விலை மற்றும் புதிய விலை: இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14999 ஆகும். இருப்பினும் அமேசான் வலைத்தளமானது இதன் மீது 27% என்கிற நேரடி தள்ளுபடியை வழங்குகிறது. இதன் கீழ் நீங்கள் சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனை ரூ.10999 க்கு வாங்க முடியும். நேரடி தள்ளுபடி மட்டும்மல்ல இந்த ஸ்மார்ட்போனின் மீது பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களும் (Bank and Exchange Offers) அணுக கிடைக்கிறது.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டு கிரெடிட் கார்டு (HSBC cashback card credit card) பரிவர்த்தனையின் போது 5% உடனடி தள்ளுபடி கிடைக்கும் (குறைந்தபட்ச கொள்முதல் மதிப்பான ரூ.1000 க்கு ரூ.250 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்). எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பொறுத்தவரை உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும்போது ரூ.10,400 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
இருப்பினும், இந்த எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) ஆனது நீங்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அதாவது உங்கள் பழைய ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்கிறதா? அதன் பாடியில் சேதங்கள் அல்லது விரிசல்கள் அல்லது கீறல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். அப்போதுதான் நல்ல எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








