Home
Mobile

தம்பி நத்திங் கொஞ்சம் ஓரமா போங்க: தரமான Samsung கேலக்ஸி எம்13, கேலக்ஸி எம்13 5ஜி அறிமுகம்.!

சமீபத்தில் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் தான் வெளிவந்துள்ளது. ஆனால் அதை விட சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிய சாம்சங் போன்களின் விலை

புதிய சாம்சங் போன்களின் விலை

அதாவது சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13, Galaxy M13 5G) ஸ்மார்ட்போன்களை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

எப்போது விற்பனை?

எப்போது விற்பனை?

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 23-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன்களை தேர்வு செய்யப்பட்ட வங்கி காரடுகள் மற்றும் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த புதிய போன்களை சாம்சங் இந்தியா தளத்திலும் வாங்க முடியும். இப்போது புதிய கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது6.5-inch ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி சிப்செட்

கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதாவது இந்த புதிய போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்களுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி பேட்டரி

இந்த புதிய போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 15W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அக்வா கிரீன், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் நிறங்களில் இந்த புதிய கேலக்ஸி எம்13 5ஜி போன் கிடைக்கும்.

வைஃபை, 5ஜி, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எம்13 4ஜி

கேலக்ஸி எம்13 4ஜி

கேலக்ஸி எம்13 4ஜி 6.6-இன்ச் எச்டி இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்13 4ஜி கேமரா

கேலக்ஸி எம்13 4ஜி கேமரா

கேலக்ஸி எம்13 4ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன்.

 கேலக்ஸி எம்13 4ஜி சிப்செட்

கேலக்ஸி எம்13 4ஜி சிப்செட்

கேலக்ஸி எம்13 4ஜி போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எம்13 4ஜி பேட்டரி

கேலக்ஸி எம்13 4ஜி பேட்டரி

கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 15W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் அக்வா கிரீன், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 போன்கள் ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழில்நுட்பம் கணடிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M13, Galaxy M13 5G launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X