தரமான செய்கை.. மலிவு விலை 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய சாம்சங்.. எந்த மாடல்?
ஃபிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கம்மி விலை 5ஜி போன்களுக்கு ஆண்ட்ராய் 14 அப்டேட் வழங்கத் தொடங்கி உள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்13 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்-ஐ வெளியிடத் தொடங்கி உள்ளது.
அதாவது தற்போது ஆண்ட்ராய்டு 14 (Android 14) மற்றும் ஒன் யுஐ 6.0 (One UI 6.0) அப்டேட் பெறத் தொடங்கி உள்ளது சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய அப்டேட் சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை கேலக்ஸி எம்13 5ஜி போனுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைத்தது. தற்போது ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கூட கிடைக்கத் தொடங்கி விட்டது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 16 வரை அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி அம்சங்கள் ( Samsung Galaxy M13 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் தற்போது இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைத்துள்ளதால் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.
5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த போனின் ஆரம்ப விலை ரூ.12,389-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








