மார்ச் 11: இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்12.!

|

சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 11-ம் தேதி புதிய சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக

எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான

ஸ்மார்ட்போன் மாடல்.

எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட்

எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு (One UI Core) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார்: அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார்: "இது டிரைலர்" என எச்சரிக்கை- என்ன நடந்தது?

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரேம் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி

நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 Black, Elegant Blue மற்றும் Trendy

மேலும் Attractive Black, Elegant Blue மற்றும் Trendy Emerald Green வண்ணங்களில் இந்த

ஸ்மார்ட்போன். அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M12 with 48 Mega Pixel Camera Launching in India on March 11: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X