Home
Mobile

இன்று சாம்சங் கேலக்ஸி M12 விற்பனை: சலுகையுடன் இவ்வளவு குறைவான விலையிலா?

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மார்ச் 18 மதியம் 12 மணிக்கு (மதியம்) தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்தியாவில் நடைபெறும் இதன் முதல் விற்பனையாகும். சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் இது எக்ஸினோஸ் 850 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1 டிபி வரை ஸ்டோரேஜ் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி M12 விற்பனை இன்று Amazon.in மற்றும் Samsung.com வழியாக ஆன்லைனில் மதியம் 12 மணிக்கு விற்பனையைத் துவங்குகிறது. அறிமுக வெளியீட்டு சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,000 கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த புதிய போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.10,999 விலையிலும், இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ. 13,499 விலையிலும் அட்ராக்ட்டிவ் பிளாக், எலகண்ட் ப்ளூ மற்றும் ட்ரெண்டி எமெர்லண்ட் கிரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12 டிஸ்பிளே விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 டிஸ்பிளே விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்12 சிப்செட் விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 சிப்செட் விபரம்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு (One UI Core) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்12 கேமரா விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 கேமரா விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+5எம்பி செகன்டரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்டோரேஜ் விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்டோரேஜ் விபரம்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1 TB வரை நீங்கள் ஸ்டோரேஜ்ஜை நீடிக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்12 பேட்டரி விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 பேட்டரி விபரம்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M12 to Go on Sale in India for First Time Today Via Amazon and Samsung Online Stores : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X