48 எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி: சாம்சங் கேலக்ஸி எம்12 அறிமுகம்!
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் வருகிறது.

சாம்சங் ஸ்மார்ட்போன் வியட்நாமில் எம் தொடர் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 12 கவர்ச்சிகரமான பிளாக், நேர்த்தியான ப்ளூ மற்றும் எமரால்டு பச்சை வண்ண விருப்பத்தில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து தற்போதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் வியட்நாம் இணைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 12., 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், டிஸ்ப்ளே மையத்தில் பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 850 செயலி இடம்பெறும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் உடன் வருகிறது. மேலும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 64 ஜிபி சேமிப்பு வசதி, 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. மெமரி விரிவாக்க ஆதரவுக்கு 1டிபி மெமரி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.
ஸ்மார்ட்போன் முன்புற கேமராவில் குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், ஆண்ட்ராய்டு 11 ஆதரவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications