Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எம் 12 மார்ச்சில் அறிமுகமா? எதிர்பார்க்கப்படும் மலிவு விலை இது தானா?

சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் மாத துவக்கத்தில் புதிய சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சாம்சங் கேலக்ஸி எம் 11 ஸ்மார்ட்போனின் வாரிசு மாடலாக நிறுவனம் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனை நாம் என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்பதற்கு சில தகவல் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M12

சாம்சங் கேலக்ஸி M12

இந்தோ-ஆசிய செய்திச் சேவை செய்தி நிறுவனம், சாம்சங் அதன் கேலக்ஸி எம் வகை மாடல்களை நாட்டில் விரிவாக்க திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளது. சாம்சங் கேலக்ஸி M12 மார்ச் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் இந்தியா அறிமுகம் குறித்து முன்னேற்றங்கள் ட்வீட் சுட்டிக்காட்டுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எம் 12 விலை (எதிர்பார்க்கப்படுகிறது)

சாம்சங் கேலக்ஸி எம் 12 விலை (எதிர்பார்க்கப்படுகிறது)
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 12 விலை சுமார் ரூ. 12,000 என்ற விலைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய சாம்சங் கேலக்ஸி எம் 11 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் போன்று பல புதிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் மேம்பாட்டுடன் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 12 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எம் 12 விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி எம் 12 இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் வியட்நாம் தளத்தில், அட்டிராக்ட்டிவ் பிளாக், எலகண்ட் ப்ளூ மற்றும் ட்ரெண்டி எமரால்டு கிறீன் வண்ண விருப்பங்களில் வெளிப்பட்டது. இது 6.5 இன்ச் எச்டி பிளஸ் 720x1,600 பிக்சல்கள் கொண்ட டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது எக்ஸினோஸ் 850 சிப்செட் உடன் 3 ஜிபி, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் விருப்பங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி

கேமரா மற்றும் பேட்டரி

கேமராவை பொறுத்த வரை இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. இது 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M12 Reportedly Launching in India in March : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X