Home
Mobile

அமேசான்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை வாங்க சரியான நேரம்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தை இப்போது அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பலஅம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிப்செட் வசதி ஆப் வசதிக

சாம்சங் கேலக்ஸி எம்12 மாடலில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளத்தைஅடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12
ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்திற்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் வசதி ஆப் வசதிகளை இயக்குவதற்கும், வீடியோ கேம் தடையின்றி விளையாடுவதற்கும் மிக அருமையாக பயன்படும்.

ம்12 ஸ்மார்ட்போனில்

இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

போனில் 6000

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். அட்ராக்ட்டிவ் பிளாக், எலகண்ட் ப்ளூ மற்றும் ட்ரெண்டி எமெர்லண்ட் கிரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது சாம்சங் கேலக்ஸி எம்12.

புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ்,

டூயல் சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். குறிப்பாக தனித்தவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்12 மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M12 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X