6000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடலை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் வியட்நாம் தளத்தில் Attractive Black, Elegant Blue மற்றும் Trendy Emerald Green வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனாலும் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்12
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு (One UI Core) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

தரமான கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+5எம்பி செகன்டரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மெமரி வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications