மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெரிய டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா, அருமையான சிப்செட் என்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்றும், பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும்.
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுää எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.
இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5இஜிபிஎஸ், க்ளோனாஸ்இசாம்சங் பேஇ டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்;ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பிளாக், ப்ளூ, ரெட் மற்றும் ப்ரிஸம் வைட் போன்ற நிறங்களில் இந்த சாதனம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








