சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 அப்டேட் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் வியட்நாமில் உள்ள கேலக்ஸி எம்11 பயனர்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருக்கும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் செட்டிங்ஸ் உள்ளே சென்று சாப்ட்வேர் புதுப்பிப்புக்குள் நுழைந்து இந்தஅப்டேட் பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 11 6.4 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. அதோடு இடது மூலையில் பஞ்ச் ஹோல் வசதியும் உள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம் உள்ளிட்ட சில நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

இந்த தொலைபேசி 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி வரை ரேம்கொண்டது. சேமிப்பை மைக்ரோ எஸ்டி வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 துளை, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆகிய வசதி உள்ளது. குறிப்பாக பின்புற கேமராக்கள் 1080p வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா வசதியும் உள்ளது. இது திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஒரு துளை-பஞ்சில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வரை ஆதரிக்கிறது, இதில் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவும் உள்ளது. 4 ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் ஆகியவை இதில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

மேலும் கோவிட் தொற்றுநோயின் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19க்கு எதிராகப் போராடும் முயற்சியில் இந்தியாவுக்கு உதவும் வகையில் சாம்சங் நிறுவனம் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பின்படி 5 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது ரூ. 37 கோடி ஆகும். வைரஸின் இரண்டாவது அலை காரணமாக முழு தேசமும் கடினமான நேரத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நேரத்திற்கு மத்தியில் சாம்சங் பிராண்டின் இந்த பங்களிப்பு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு மில்லியன் எல்.டி.எஸ் சிரிஞ்ச்கள் உட்பட 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு
வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பங்குதாரர்களுடன் சரியான ஆலோசனைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் உடனடி தேவைகளை மதிப்பிட்ட பிறகே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M11 Received Android 11 update: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X