Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனம் தனது அசத்தலான கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்புக்கு பின் 3ஜிபி ரேம் மறறும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனை ரூ.9,999-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்11

சாம்சங் கேலக்ஸி எம்11

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்11 மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக கருப்பு, நீலம் உள்ளிட்ட சில நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

 1560 x 720 பிக்சல்கள் திரை

1560 x 720 பிக்சல்கள் திரை

சாம்சங் கேலக்ஸி எம் 11 6.4 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. அதோடு இடது மூலையில் பஞ்ச் ஹோல் வசதியும் உள்ளது.

 ஸ்னாப்டிராகன் 450 செயலி

ஸ்னாப்டிராகன் 450 செயலி

இந்த தொலைபேசி 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி வரை ரேம்கொண்டது. சேமிப்பை மைக்ரோ எஸ்டி வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

டிரிபிள் ரியர் கேமரா

கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 துளை, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆகிய வசதி உள்ளது. குறிப்பாக பின்புற கேமராக்கள் 1080p வரை வீடியோபதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா வசதியும் உள்ளது. இது திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஒரு துளை-பஞ்சில் வைக்கப்பட்டுள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரி

5,000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வரை ஆதரிக்கிறது, இதில் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவும் உள்ளது. 4 ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் ஆகியவை இதில் உள்ளது.

குந்தபடி உள்ளது என்றுதான்

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M11 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X