பக்கா பட்ஜெட் விலை: இன்று முதல் விற்பனைக்கு வருகிறது Samsung Galaxy M11, Galaxy M01!

|

Samsung Galaxy M11, Galaxy M01 இன்று மதியம் 12 மணிமுதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்றுமுதல் விற்பனை

இன்றுமுதல் விற்பனை

கடந்த 2 ஆம் தேதி சாம்சங் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இன்று விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் நிறுவனம் அறிவித்த எம்-சீரிஸ் கேலக்ஸி எம் 11 மற்றும் எம் 01 ஆகியவை இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பக்கா மலிவு விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பிளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிமுதல் விற்பனை

பிளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிமுதல் விற்பனை

இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வசதி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M01 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி M01 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எம் 01 5.71 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, 1560 x 720 பிக்சல் திறை தெளிவுத்திறனுடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

 செல்பி கேமரா வசதி

செல்பி கேமரா வசதி

கேலக்ஸி M01 இல் இரட்டை கேமரா அமைப்பு 13 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 2 எம்பி கேமரா வசதியோடு வருகிறது. இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியும் இருக்கிறது.

எனது வெற்றி அதிர்ஷ்டமில்ல., என் முதல் விமானப் பயணம் இப்படிதான்: சுந்தர்பிச்சை பகிர்ந்த நினைவுகள்!எனது வெற்றி அதிர்ஷ்டமில்ல., என் முதல் விமானப் பயணம் இப்படிதான்: சுந்தர்பிச்சை பகிர்ந்த நினைவுகள்!

ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது

ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 4000 எம்ஏஹெச் பேட்டரி வசதியும் அதோடு 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி ஆகியவையோடு விற்பனைக்கு வந்துள்ளது.

3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கேலக்ஸி எம் 11

3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கேலக்ஸி எம் 11

3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எம் 11 ஸ்மார்ட்போனானது ரூ .10,999 விலையுடனும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விலையானது ரூ .12,999 என்கிற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. கேலக்ஸி எம் 01 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.8999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எம் 11 6.4 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. அதோடு இடது மூலையில் பஞ்ச் ஹோல் வசதியும் உள்ளது. இந்த தொலைபேசி 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா

கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா

கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகிய கேமரா வசதி உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M11, Galaxy M01 sale start today via flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X