Samsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு! சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பைச் சத்தமில்லாமல் அறிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எம் 11 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 01 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பிற்குப் பின்னர் இந்த ஸ்மார்ட்போன்கள் என்ன விலையில் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்ஸி M11 மற்றும் சாம்சங் கேலக்ஸி M01
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M11 மற்றும் சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன்களின் விலையை சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் குறைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனின் மேல் ரூ .1000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போன் வேரியண்ட்களுக்கு ரூ .1000 வரையிலான விலைக் குறைப்பை நிறுவனம் வழங்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு
சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்ட் மாடலுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி M01 போனின், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .8999 என்ற அசல் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது, இந்த ஸ்மார்ட்போன் ரூ .1,000 விலைக் குறைப்பைப் பெற்று வெறும் ரூ .7,999 என்கிற விலைக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M11 விலை குறைப்பு
சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போனின், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .10,999 விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வெறும் ரூ .12,999 விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ .1,000 விலை குறைப்பு
தற்பொழுது ரூ .500 விலை குறைப்பிற்குப் பின்னர் 3 ஜிபி வேரியண்ட் ரூ .10,499 என்ற விலையிலும், அதன் 4 ஜிபி வேரியண்ட் மடலுக்கு ரூ .1,000 விலை குறைப்புடன் வெறும் ரூ .11,999 என்ற விலையில் கிடைக்கிறது.

விற்பனை
இந்த விலைக் குறைப்பை முதலில் மும்பை பாஸர் சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி M01 கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போன் கருப்பு, வயலட் மற்றும் நீல வண்ணங்களிலும் விற்பனை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications