சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1 அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளவந்துள்ளது. இதனுடன் June 2021 Android security patch அப்டேட் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கண்டிப்பாக இந்த புதிய அப்டேட் வசதி கேலக்ஸி எம்10எஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 1520 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 1.6ஜிகிஹெர்ட்ஸஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7884பி பிராசஸர் வசதியை கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது, தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் சாதனத்தின் பின்புறம்13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் மாடலில் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications