அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்10 & எம்20 அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
காட்ஜெட் பிரியர்களுக்கும், செல்பி பிரியர்களுக்கும் சாம்சங் நிறுவனம் முக்கியமாய் இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.
காட்ஜெட் பிரியர்களுக்கும், செல்பி பிரியர்களுக்கும் சாம்சங் நிறுவனம் முக்கியமாய் இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் படுத்தவுள்ளது.

இன்று மாலை அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று மாலை 6 மணி அளவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் கடையில் விற்பனைக்குக் கிடைக்குமென்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் "நொடிப்ஃபை மீ"
புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட் போன் இன் சிறப்பு என்னவென்றால் சிறந்த பேட்டரி, கேமரா, டிஸ்பிளே மற்றும் பிராசஸர் சேவையுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இன்று மாலை முதல் அமேசான் தளத்தில் நொடிப்ஃபை மீ சேவையுடன் முன்பதிவிற்கான துவக்கத்தை துவங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்10 விலை:
சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் இன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.7,990 என்ற விலையிலும் மற்றும் அதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளதா சேமிப்பு வேரியண்ட் ரூ.8,990 என்ற விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்20 விலை:
சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் இன் துவக்க மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.10,990 என்ற விலையிலும் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.12,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications